Header Ads



தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள


 இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 10 லொறிகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள்  தபால் போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கப்பட்டன.

இந்த முழுமையான திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் தபால் பொருட்கள், பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் சேவை மற்றும் SL Post Courier சேவைகளை விரைவுபடுத்த புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும்.


கடந்த ஆண்டு இரண்டு பாரிய சவால்கள் ஏற்பட்ட போதிலும், தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபாவை வருமானமாகப் ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.