Header Ads



மகாராஷ்டிராவை அதிரச் செய்துள்ள 2 பேரின் வெற்றி - பதவிகளையும் பிடித்தனர்


மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம்  மாலேகான் மாநகராட்சி பெண் மேயராக  ஷெய்க் நஸ்ரின் காலித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


அதைவிட ஆச்சரியம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சியின் பெயரே இஸ்லாம் கட்சி.


காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க மறுப்பதை எதிர்த்து மகாராஷ்டிரா முன்னாள் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்  ஆசிப் ஷெய்க் ரசீத் அந்த மாநிலத்தில்  சிறுசிறு குழுக்களாக இயங்கி வந்த  முஸ்லிம் அமைப்புகள ஒருங்கிணைத்து Indian Secular Largest Assembly Of Maharashtra (ISLAM) என்ற பெயரில் கட்சியை உருவாக்கி சமாஜ்வாதி ஜனதா கட்சியுடன் Malegaon Secular Front என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டதில்  81 வார்டு கொண்ட மாலேகான் மாநகராட்சியில் 35 வார்டுகளை இஸ்லாம் கட்சி கைப்பற்றியது.


ஓவைசியின் AIMIM கட்சி 21சீட்,  ஷிண்டே பிரிவு சிவசேனா 18 சீட், சமாஜ்வாதி கட்சி 5சீட் வெற்றி பெற்ற தேர்தலில் மாலேகான் மாநகராட்சி வாக்காளர்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறுமனே 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற வைத்துள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


2வது அதிக கவுன்சிலர் கொண்ட ஒவைசி கட்சி ஒத்துழைக்க மறுத்து மேயர் தேர்தலை புறக்கணித்த நிலையில் இஸ்லாம் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷெய்க் நஸ்ரின் காலித் மாலேகான் மாநகராட்சி முதல் முஸ்லிம் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சமாஜ்வாதி கட்சி சார்பில்  ஷானா ஹிந்த் நிசார் துணை மேயராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.


இவர்களை எதிர்த்து  சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர். 


2008ல் நடந்த குண்டு வெடிப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றி  சங்க பரிவாரங்கள் மிக ஆழமாக வேரூன்றிய பகுதிகளில் மாலேகான் முக்கியமானது.


அனைத்து ஆதாரங்களும் பெண் துறவி பிரக்யாசிங் தாகூர் தலைமையிலான இந்துத்துவ கும்பல் குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை  2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு  என்.ஐ.ஏ. பயன்படுத்தி விடுதலை செய்ததுடன் பிரக்யாசிங் தாகூரை  எம்.பி.யாகவே ஆக்கிய கொடுமையும் நடந்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி இயக்கங்களாக பிரிந்து சென்று வலுவிழந்து தேர்தலை சந்திக்கும் இஸ்லாமிய அரசியல் அமைப்புகளுக்கு  மாலேகான் மாநகராட்சி தேர்தல் முடிவு பாடமாக கொள்ள வேண்டும்.


சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுபவர்கள் உள்ளாட்சி தேர்தலில்  வலுவாக உள்ள பகுதிகளில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது  நலம் பலம் வளமாக அமையும்..

Colachel Azheem

No comments

Powered by Blogger.