பார்வைத்திறனற்ற 2 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மூன்றாம் நாளான நேற்று (21) பார்வைத்திறனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி. சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பார்வைத்திறனற்ற இந்த இரு மாணவர்களும், தமது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
-பிரதீபன்-

Post a Comment