'காலி குமாரி' ரயிலில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
இன்று (22) காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் கடவையில் வர்ண சமிஞ்சை முறைமை சரியாக இயங்கவில்லை எனவும், குறித்த ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் பொருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment