Header Ads



17 வயது A/L மாணவி கோடாரியால் தாக்கப்பட்டு கொலை


பொலன்னறுவை - முஸ்லிம் கொலனி   17 வயது பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே  கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர்.


இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய பாத்திமா நஷீமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவி கடந்த 17ஆம் திகதி பிரத்தியேக வகுப்பொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பியிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கோடாரியால் அவரது தலையில் தாக்கி பாரிய காயங்களை ஏற்படுத்தியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


கோடாரித் தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி, பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை (04)  அன்று உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.