Header Ads



பிறந்த நாளில் தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்

 


அம்பாறை - பதியதலாவ பகுதியில் தொழிலதிபர் இந்திரசிறி பராக்கிரம கஜதீர தனது 64 ஆவது பிறந்த நாளை டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கொண்டாடியுள்ளார்.


இவர் தனது பிறந்த நாளில் டித்வா சூறாவளியால் கடுமையாக சேதமடைந்த பதுளை மாவட்ட பாடசாலைகள், சிறிய குளங்கள், கோயில்கள் மற்றும் மண்டபங்களை மீண்டும் கட்டியெழுப்பும் முகமாக சீமெந்து மூட்டைகளை வழங்கியுள்ளார்.


குறித்த தொழிலதிபருக்கு பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன வழி காட்டியுள்ளார். பதியதலாவிலிருந்து 400 சீமெந்து மூட்டைகளை லொறிகளில் ஏற்றிவந்து பதுளை மீகஹகிவுல பிரதேச சபையில் ஒப்படைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.