Header Ads



எதிர்க்கட்சிகளின் மிரட்டல் நாடகங்களுக்கு இந்த அரசு அடிபணியாது


எதிர்க்கட்சிகளின் மிரட்டல் நாடகங்களுக்கு இந்த அரசு அடிபணியாது என்று அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். 


போலியான விடயங்களைக் குறிப்பிட்டு கொண்டு ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றமையாலும், இன்னொரு தரப்பினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபட்டமையாலும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தல் பிற்போடப்படவில்லை.


எதிர்க்கட்சித் தலைவரும் இனவாதிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டமை அதிருப்திக்குரியது. புதிய கல்வித் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றமையாலும், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டமையாலும் புதிய கல்விக் கொள்கையை அரசு பிற்போடவில்லை.


ஆறாம் தரத்துக்கான புதிய பாடத்திட்டம் மாத்திரமே 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவோம்." - என்றார்.

No comments

Powered by Blogger.