ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய ஜனாதிபதி
பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

Post a Comment