சஜித் தலைமையின் கீழ், ரணில் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும்
SJB மற்றும் UNP ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித் தலைமையின் கீழ், ரணில் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
"ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இது பற்றி கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அவர் தெரியப்படுத்துவார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்தாலும் பொது விடயங்களின்போது ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டுப் பயணம் இடம்பெறும்.
மீண்டும் நாடாளுமன்றம் வருவதில் ரணில் விக்ரமசிங்க ஆர்வம் காட்டவில்லை. வலுவானதொரு கூட்டு எதிரணியை உருவாக்கவே அவர் முற்படுகின்றார். எனவே, சஜித்தின் தலைமையின் கீழ் ரணிலின் ஆலோசனையுடன் இணைந்து பயணித்தால் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அரசியல் ரீதியில் சவால் விடுக்கக் கூடியதாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment