தெய்வக் கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது
தற்போதைய NPP அரசாங்கம் குரோதத்தை விதைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாரிய பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டது இந்த பொய்களினால் தெய்வக் கோபம் ஏற்பட்டு நாடு அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளதாக UNP யின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாயிரத்து நான்காம் ஆண்டிலும் இவ்வாறு ஓர் நிலைமை ஏற்பட்டு சுனாமி பேரழிவு நிகழ்ந்தது. ரணில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அப்போது இவ்வாறு பொய்யுரைக்கப்பட்டது. இதனால் கடவுளின் கோபத்திற்கு உட்பட்ட நாடு சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டது.
இந்த அரசாங்கம் குரோதம், கோவம், பேராசை, பொய்களை விதைத்தது எனவும் அதன் பார தூரமான விளைவுகள் ஆகத்தானவை. பழக்கமில்லாத ஓர் தரப்பு தற்பொழுது பௌத்த பிக்குகளை வணங்கவும், தானங்களை செய்யவும் பழகிக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment