இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்களை இலவசமாக வழங்குகிறது அமெரிக்கா
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்த ஹெலிகொப்டர்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. 'மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்' (Excess Defense Articles Program - EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றன.

Post a Comment