Header Ads



இஸ்ரேல் மீது ஈரான் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்தினால்..?


இஸ்ரேல் மீது ஈரான் முந்திக்கொண்டு தாக்குதல் நடத்தினால்,  அது 'மிகக் கடுமையான விளைவுகளை' சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல், ஈரானுக்கு ஒரு செய்தியை அனுப்பியதாக நெதன்யாகு நேற்று திங்களன்று (5) அந்நாட்டு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.


ஈரானின் தவறான கணக்கீடு, இஸ்ரேல் மீது ஈரான் முந்திக்கொண்டு தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேலுக்குள் கவலை இருப்பதாக அந்நாட்டு ஊடகமான KAN கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


அதேவேளை ஈரான் மீது நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம் என, ரஸ்யா ஊடாக இஸ்ரேல் ஈரானுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக, துருக்கிய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.