Header Ads



கல்வியமைச்சின் முன் சத்தியாக்கிரகப் போராட்டம் - வீரவன்ச அழைப்பு


புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், அதற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரியும் நாளை (12.01.2026) முதல் கல்வி அமைச்சுக்கு முன்னால் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.


தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்துப் பெற்றோர்களும் எவ்வித பேதமுமின்றி நாளை காலை 9 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இணைய வேண்டும். இந்த அழிவுகரமான கல்விச் சீர்திருத்தங்கள் முழுமையாகத் திரும்பப் பெறப்படும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.