Header Ads



நவீன அரசியல் உலகில்...


நவீன அரசியல் உலகில், ஒரு நாட்டின் கெளரவம், கம்பீரம் வாய்ப் பேச்சுக்கள் அல்லது வீர முழக்கங்களால் அளவிடப் படுவதில்லை. 


மாறாக ஒவ்வொரு நாடும் திரைக்குப் பின்னால் கையகப்படுத்தி வைத்திருக்கும் சக்திகளைக் கொண்டே அளவிடப்படும்.


உதாரணமாக இன்று வட கொரியா அதிபர், யாரும் நெருங்க அஞ்சும் ஒரு சக்தியாக பார்க்கப்படுகிறார். இது அவர் நல்லவர், வல்லவர் அல்லது ஜனநாயகவாதி என்பதற்காகவல்ல.


அவரை அணுகுவதற்கு முன் எந்த கையும் இருமுறை சிந்திக்க வைக்கும் ஆயுதம் அவரிடம் இருக்கிறது என்பதாகும். 


அணு ஏவுகணைகள் அவருக்கு பெரும் மரியாதையைப் பெற்றுக்கொடுக்கவில்லை.


அவருக்கு சமன்பாட்டைத் தான் வழங்கியது அது, அவரை நெருங்கினால் பெரும் விலை கொடுக்க வேண்டி வரும் என்பதாகும். 


ஆனால் இந்த கவச சக்தி இல்லாத எந்த நாடும், அழுத்தம், அச்சுறுத்தல்கள் மற்றும் அரசியல், பொருளாதார அடிபணிதல்கள்  என குனிந்து, வளைந்து போக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன. 


அவர்கள் எவ்வளவுதான் குரல்களை உயத்தினாலும் அல்லது எவ்வளவு பெரிய  கூட்டணிகள் வைத்திருந்தாலும் எந்த நேரமும் நசுக்கப்படலாம் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். 


நவீன அரசியல் சக்திகள், ஒரு நாட்டின் இறைமை, நேர்மை, நாணயம் என்பதற்காக எல்லாம் மதிப்பளிக்காது. மாறாக ஒரு நாட்டிடம், யாராலும் அதனை நெருங்க முடியாத பலம் இருந்தால் மாத்திரமே அதனை கம்பீரமாகப் பார்க்கும்.


அதாவது யாரிடம் அடித்து விரட்டும் ஆயுதம் இல்லையோ அவர் ஆதிக்க சக்திகளுக்கு சரணாகதி ஆக வேண்டியதுதான். 


யாரிடம் அடித்து விரட்டும் ஆயுத பலம் இருக்கிறதோ அவரை இந்த உலகம் அண்ணாந்து பார்க்கும்.


இதைத்தான் ஒரு கவிஞர்:


'மிகைப்பவன் எவனோ அவனுக்கே உலகம் சொந்தம்" என்பதாக விவரிக்கிறார். 

✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.