Header Ads



நுவரெலியாவில் குளு குளு காலநிலை


நுவரெலியாவில் நிலவும் குளு குளு  காலநிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. பல இடங்களில் தற்போது   உறை பனியும், மாலை வேளையில் பனிமூட்டமும் நிலவி வருகின்றது. 


காலநிலையை அனுபவிக்க இலங்கையில் மட்டுமில்லாது, வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 


விக்டோரியா தாவரவியல் பூங்காவிலும், பழமையான பிரதான தபால் அலுவலகம் பகுதியிலும் நுவரெலியா - பதுளை பிரதான வீதியோரத்தில் உள்ள கிரகரி வாவி பகுதிகளிலும் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சூழ்ந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.