முல்லைத்தீவில் நில அதிர்வு
முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று (31) சிறியளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் இதனை சஉறுதிபடுத்தினார்.
அதன்படி, இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோளில் 3.6 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களும் இந்த நில அதிர்வை உணர்ந்துள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்றும் இந்த நில அதிர்வினால் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

Post a Comment