Header Ads



ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு நற்செய்தி


ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவின் காரணத்தால் பறவைகள் உணவு கிடைக்காமல் திணறின. இதனால் ஆப்கான் இஸ்லாமிய அரசு மலைகளிலும் வெட்டவெளிகளிலும் தானியங்களை தூவியது.


யாசகம் கேட்பவர்களும் வறியவர்களும் தெருக்களில் இருந்து அகற்றப்பட்டு, நாடு தழுவிய மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.


என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும் ஷரீஅத் சட்டம் நிலைநாட்டப்படும் நாட்டில் மனிதர்களோ விலங்குகளோ பசியால் அவதிப்படுவது பொருத்தமற்றது.


ஆப்கானிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை ஐந்தாம் நேர்வழி பெற்ற கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் சீர்திருத்த நடவடிக்கையை நினைவூட்டுகிறது.


அவர் கூறினார்:


"அன்றொரு நாள் இஸ்லாமிய தேசத்தில் ஒரு பறவை பசியுடன் இருந்தது என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக… மலை உச்சிகளில் தானியங்களை தூவுங்கள்."


ஷரீஅத் சட்டம் உண்மையாக செயல்படுத்தப்பட்டால் அதன் தாக்கம் இப்படித்தான் இருக்கும்.


✍️ நூஹ் மஹ்ழரி

No comments

Powered by Blogger.