நாடு இந்த ஆட்சியில் வங்குரோத்தடைந்துள்ளது
உண்மையில் நாடு இந்த ஆட்சியில் தான் வங்குரோத்தடைந்துள்ளது. நாட்டின் எந்தவொரு ஜனாதிபதியினதும் வாழ்க்கை முறைமை தொடர்பில் நாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புடன் நடைபயிற்சி செய்வதாக அவர் மீது எம்மால் குற்றஞ்சுமத்த முடியாது. அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.
அதேபோன்று தான் ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளை அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமானால் இனிவரும் எந்தவொரு ஜனாதிபதியும் நாட்டுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்க முன்வர மாட்டார்கள். நாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில் பூகோள அரசியலில் எம்மால் தனித்து பயணிக்க முடியாது.
பெலவத்தை அலுவலகத்துக்குள் இருந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்ய முடியாது. தற்போது சட்டமா அதிபர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதைப் போன்று முன்னர் சில நீதியரசர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பதவி உயர்வு வழங்கப்பட வேண்டியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் எதேச்சதிகாரமான தலையீடு காணப்படுகிறது. இது நாட்டுக்கு சிறந்ததல்ல.
நாமல் ராஜபக்ஷ Mp

Post a Comment