சவூதி - ஜித்தா இலங்கை கவுன்சிலர் ஜெனரல் பதவிக்கு, நீதிபதி மொஹமட் லஃபார் தாஹிர்
சவூதி - ஜித்தா இலங்கை கவுன்சிலர் ஜெனரல் பதவிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ள அறிய வருகிறது.
முஸ்லிம் அல்லாத ஒருவரை முன்னர் நியமிக்க எடுத்த தீர்மானம், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளையும் கருத்துகளையும் தொடர்ந்து அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானத்தின் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி லஃபார் தாஹிர் அவர்களை ஜித்தாவிற்கான இலங்கை கவுன்சிலர் ஜெனரலாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் கோபத்தையும், உணவுர்களையும் புரிந்துகொண்டு முன்னைய நியமனத்தை வாபஸ் பெற்ற, NPP அரசாங்கத்திற்கு ஒரு நன்றி சொல்லலாமா...?
மொஹமட் லஃபார் தாஹிர் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற ஒரு கருத்தும் சமூக ஆர்வலர்களிடையே உள்ளமை கவனிக்கத்தக்கது.

Post a Comment