Header Ads



அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலர்களின் வழிபாட்டுத் தலம் மீளப் பெறப்பட்டது


பொத்துவில் அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலர்களின் வழிபாடுகள் இடம்பெற்ற சபாத் இல்லம் சனிக்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது.


பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எனப்படுபவர் சுற்றுலா ஹோட்டல் செய்வதற்காக ஒருவருக்கு விற்பனை செய்த இந்த இடத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் பெற்று ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரன்டாக இயக்கி வந்தார்.


இது தொடர்பாக குறிப்பிட்ட காணியை வழங்கிய தமீம் எனப்படுபவரும் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகி வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த காணியை விற்பனை செய்த தமீம் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் அதிக விலை கொடுத்து மீள பெறப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து நேற்று குறித்த இடத்தில் காணியின் உரிமையாளர் தமீம் தலைமையில் பால் சோறு வழங்கி துஆ பிரார்த்தனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இலங்கையில் சபாத் இல்லமாக இயங்கிய இடங்களில்  முதற்தடவையாக மீளப் பெற்ற இடமாக அறுகம்பையில் இயங்கிய இந்த இடம் மட்டுமே என்பது எல்லோராலும் பார்க்கப்படுவதுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனது இடத்தை மீளப் பெறுவதற்காக இரவு பகலாக முயற்சித்த பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றார்.


இந்த இடத்தை கொடுத்து நான் பட்ட கஷ்டங்களும் விமர்சனங்களும் ஏராளம். எனவே இனி மேல் யாரும் இவ்வாறு இடங்களை விற்பனைக்கோ வாடகைக்கோ விட வேண்டாம் என அதன் உரிமையாளர் தமீம் கருத்துரைத்தார்.


தமிழ்மிரர்

No comments

Powered by Blogger.