Header Ads



“இனி தீவிர அரசியலில் நான் ஈடுபடவில்லை“ - ரணில்


ரணில் விக்கிரமசிங்க இன்று (23)  கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை   ஆசிகளைப் பெற்றார்.


இந்த சந்திப்புகளின் போது, ​​நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்களுடன் விக்ரமசிங்க கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அரசியல் விஷயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, ​​விக்ரமசிங்க அவர்களின் கேள்விகளுக்கு “இனி தீவிர அரசியலில் நான் ஈடுபடவில்லை“ என சுருக்கமாக பதிலளித்தார்.

No comments

Powered by Blogger.