சமூக ஊடகங்களில் பரவிவரும் போலி காணொளி - முதலீட்டு சபை எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலியான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காணொளி குறித்து மக்களுக்கும் தொடர்புடைய தரப்புகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியில், பணிப்பாளர் சபை தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரேணுகா எம். வீரகோனின் உருவம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Post a Comment