இன நல்லிணக்கம் ஏற்படாமல், சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது
இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது.உண்மையான சுதந்திரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நிலையான சமாதானம் அவசியம். இதற்கு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படாமல் எம்மால் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. நாட்டில் மீண்டும் இனவாத மோதல் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது.
தேசிய சமத்துவம் கட்டியெழுப்படும். உண்மையான சுதந்திரம் நிலைநிறுத்தப்படும். சிறப்பானதொரு நாட்டை உருவாக்கவும், வளமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்
அமைச்சர் சந்தன அபேரத்ன

Post a Comment