அலைசறுக்கு விளையாட்டில் விபரீதம்
புத்தளம் - மோதரவெல்ல பகுதியில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நலிந்த சதுரங்க அனுருத்த மெண்டிஸ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது திடீர் அலையில் சிக்கியுள்ளனர். அவர்களில் பலர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அலைகளில் சிக்கிய 47 வயதுடைய ஒரு பெண்ணையும் அவரது 16 வயது மகளையும் அங்கிருந்த வெளிநாட்டு குழுவொன்று மீட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு நிலை காரணமாக உயிரிழந்தவர் மீது எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. எனினும் குழுவில் அவர் காணவில்லை என்பதை அறிந்து கொண்டு கடலில் மூழ்கியவரை தேடிப் பிடித்துள்ளனர்.
உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Post a Comment