Header Ads



இலவசமாக விநியோகிப்பதற்காக பேரித்தப்பழங்களுக்கான வரிச் சலுகை பெறுவது தொடர்பாக...


2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக  இறக்குமதி செய்யப்படுகின்ற பேரித்தப்பழங்களுக்கான வரிச் சலுகை பெறுவது தொடர்பாக.


இவ்வருட ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல், அரபுக் கல்லூரி மற்றும் Trust  அல்லது அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சமூக சேவக நிறுவனங்கள், ஆகியவற்றின் பெயரில் நன் கொடையாக கிடைக்கப் பெற்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பேரித்தப்பழங்களுக்ககான வரிச்சலுகை 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விஷேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் பிரிவு 2 இன் உப பிரிவு (3) இன் ஏற்பாடுகளுக்குட்பட்டு 2026 சனவரி 01 முதல் 2026 மார்ச் 20 வரையான காலப்பகுதிக்கு மாத்திரம் அரசினால் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எனவே,  திணைக்களத்தில் சிபாரிசினை பெற கீழ் வரும் விடயங்களை கவனத்திற் கொள்வதுடன் தேவையான சகல ஆவணங்களையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.


1. பேரித்தப்பழங்களுக்கான Bill of Lading பிரதி சமரப்பிக்கப்படல் வேண்டும்.


2. Bill of Lading இல் பேரித்தப்பழம் பெறுனராக (Consignee) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல், அரபுக் கல்லூரி மற்றும் Trust அல்லது அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சமூக சேவக நிறுவனங்கள் ஆகியவற்றின பெயர் குறிப்பிடப்படல் வேண்டும்.


3. சமூக சேவக நிறுவனங்களின் (Organization / Association) பெயரில் கொண்டு வரப்படும் பேரித்தப்பழங்களுக்கு சத்தியக்கடதாசி (Affidavit) சமர்ப்பிக்கப்டல் வேண்டும். அதில் கட்டாயம் இலவசமாக கிடைக்கப் பெற்ற பேரித்தப்பழங்களை ஜமாத்தினருக்கு இலவசமாக வழங்குவதினை உறுதிப்படுத்துவதுடன், சமூக சேவக நிறுவனங்களின் (Organization / Association) பதிவுச் சான்றிதழ் பிரதி  சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.


4. தனிநபர் அல்லது நிறுவனத்தின் பெயர் காணப்படின் பேரித்தப்பழங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசலுக்கு  வழங்கி அப் பள்ளிவாசலினூடாக ஊர் ஜமாத்தினருக்கு நன்கொடையாக வழங்குவதனை உறுதிப்படுத்தும் கடிதம்.


5. தனிநபர் அல்லது நிறுவனத்தினால் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் பேரித்தப்பழங்களை ஊர் ஜமாத்தினருக்கு விநியோகிப்பதனை  பள்ளிவாசல் தலைவர் அல்லது செயலாளரினால் உறுதிப்படுத்தும்  கடிதம்.


6. 2025 ஆம் ஆண்டில் இவ் வரிச்சலுகையினூடாக பேரித்தம் பழங்களை இறக்குமதி செய்தவர்களாயின், பேரித்தப்பழம் பெற்றுக் கொண்டவர்களின் கையொப்பங்கள் அடங்கிய விபரங்கள்.


7. பேரித்தப்பழங்களுக்காக வழங்கப்படும் Bill of Lading இல் பேரித்தப்பழத்துடன் வேறு ஏதும் பொருட்கள் காணப்பட்டால் பேரித்தப்பழம் விடுவிப்பதற்கு தேவையான சிபாரிசுக் கடிதம் வழங்கப் படமாட்டாது.


8. பேரித்தப்பழங்களுக்காக வழங்கப்படும் Bill of Lading இல் பேரித்தப்பழத்தின் அளவு கிலோகிராமில் (Kilogram) கூறப்படவில்லை எனின் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கும் கடிதத்தில் பேரித்தப்பழத்தின் அளவு (கிலோகிராம்) குறிப்பிடல் வேண்டும்.


9. பேரித்தப்பழங்களுக்காக வழங்கப்படும் Bill of Lading இல் பேரித்தப்பழம் என்று குறிப்பிடப்படாமல் காணப்பட்டால், சத்தியக்கடதாசி (Affidavit) சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.


10. பள்ளிவாசலினால் பேரித்தப்பழங்கள் விநியோகிப்படும் நபர்கள் மற்றும் விநியோகிப்படும்  அளவு  சமபந்தமாக  குறிப்பிடப்படும் ஆவணம்.


11. பேரித்தப்பழங்களுக்கான வரிச் சலுகை பெறுவதற்கு திணைக்களத்தினால் ஒவ்வொறு மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள கள உத்தியோகத்தர்களின் சிபாரிசு கடிதம் சமர்ப்பிக்கபடல் வேண்டும். அதில் கட்டாயம்; கள உத்தியோகத்தரகளின்; கண்கானிப்பில் விநியோகிப்படுவதனையும் பேரித்தப்பழம் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் மற்றும் கையொப்பம் பெற்று அதன் மூலப் பிரதி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதனையும் உறுதிப்படுத்தல் வேண்டும்.


12. திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒப்பந்தப் படிவத்தில் பள்ளிவாசல் தலைவர் அல்லது செயலாளர் அல்லது பொருளாளர் கையொப்பம் மற்றும் கைநாட்டு இடல் வேண்டும்.     (தமது பதவி நிலையினை உறுதிப்படுத்தும் ஆவணம் சமரப்பிக்கப்படல் வேண்டும்)              அல்லது அவர்களினால் அதிகாரம் வழங்கப்பட்ட நம்பிக்கையாளர் ஒருவரினால் கையொப்பம் மற்றும் கைநாட்டு இடல் வேண்டும். மேலும் இரண்டு நபர்களினால் சாட்சி கையொப்பமிடல் வேண்டும் அதில் ஒருவர் (Consignee) ஆக இருத்தல் வேண்டும்.


13. மேல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரினதும் அடையாள அட்டைகளின் பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். 


மேல் குறிப்பிடப்பட்டுள்ள சகல ஆவணங்களும் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு அவை பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே திணைக்களத்தின் கடிதம் வழங்கப்படும். அக்கடிதத்திற்கமையவே புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சின் கடிதம் பெற்று சுங்கத் திணைக்களத்திலிருந்து பேரித்தப்பழங்களை 1 ரூபாய் வரி செலுத்தி விடுவித்துக் கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


எம்.எஸ்.எம். நவாஸ் 

பணிப்பாளர்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

No comments

Powered by Blogger.