Header Ads



முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள, கட்டிடத்தொகுதியை சமூகம் தக்க வைக்குமா..? தாரை வார்க்குமா..??




இலங்கை முஸ்லீம்களுக்கென 9  மாடிகளைக்கொண்ட  ஒரு பாரிய கட்டிடத்தொகுதி சுமார் 596 மில்லியன் ரூபா செலவில் அரசாங்கத்தால் முஸ்லிம் விவகாரங்களுக்கென் வழங்கப்பட்டது இதனை ஜனவரி 17ம் திகதி 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வைபவரீதியாக திறந்து வைத்தார்கள்.


இக்கட்டிடம் இல :180 டி .பி ஜாயா மாவத்தை கொழும்பு -10 என்ற முகவரியில் அமைந்த காணப்படுவதுடன் மருதானைப்பபாலத்திலிருந்து நோக்கும்போதுஇஸ்லாமிய கட்டிடக்கலையை பிரதிபலித்தவன்னம்  தலை நகரின் மிகப்பெறுமதியான ஒரு இடத்தில்கம்பீரமாக தோற்றமளிப்பதைக்காணலாம் இக்கட்டிடத்தொதியிலேயே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வகுப் பிரிவு, வகுப் சபை,வகுப் நீதிமன்றம் என்பன ஒரேகுடையின் கீழ் இயங்கவுள்ளதுடன் தொழுகை அறை, மகாநாட்டு மண்டபம்,நூல் நிலையம், இஸ்லாமிய அரும் பொருட்கள்சாலை என்பனவற்றையும்கொண்டு இயங்க திட்டமிடப்பட்டிருந்தது


• தற்போதைக்கு இக்கட்டிடமே இலங்கை முஸ்லீம்களுக்குள்ள மிகப்பெரிய கலாச்சார கட்டிடத்தொகுதியாகும்


• இதுபோன்றதோர்  நிரந்தரக்கட்டிடம் ஹிந்து கலாச்சாரத்திணைகளத்திற்கோ  அல்லது கிறிஸ்தவ கலாச்சாரத்திணைக்களத்திற்கோ இருக்கவில்லை


• தற்போதுள்ள அரசியல் சமூக சூல்நிலையில் இதுபோன்றதோர் இடத்தில் இதுபோன்றதோர் கட்டிடத்தை உருவாக்குதல் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது


மு.ச.ப.அலுவல்கள் திணைக்களம் 1981ம் ஆண்டுஐக்கிய தேசியக்கட்சி ஆடசிக்காலத்தில் உருவாக்கப்பட்டு அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த மர்ஹூம் எம.எச். முஹம்மத் அவர்களின் பொறுப்பின்கீழ் கொண்வரப்பட்டது. இதற்கு முன்பு கொழும்பு – 5 கெப்படிபொல மாவத்தையில் இயங்கிவந்த வகுப்பிரிவும் இத்திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது இதனை மர்ஹும் எம். எச் . முஹம்மத் அவர்கள்மிகச்சிறப்பான  முறையில் வழிநடாத்தினார்கள் . இத்திணைக்களம் அப்போது டி. ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சின் ஓரு பகுதியிலுள்ள அதன் மேல்மாடியில் இயங்கிவந்தது(இக்கட்டிடம் தற்பொழுது அமைந்துள்ள புதிய கடடிடத்திற்க  எதிரே  பாதையொரத்தில் அமைந்து காணப்படுகின்றது) இக்கட்டிடத்திலயே 1990ம் ஆண்டு வரை மு.ச.ப.அ.திணைக்களம் இயங்கிவந்தது. 


இக்கட்டிடத்தின் மேல்மாடியிலிருந்து பார்க்கும்போது தற்பொது புதுக்கடடிடம் அமைந்துள்ள பகுதி பெரும்காடடர்ந்த பகுதியாகக்காணப்பட்டதுடன் அப்பகுதியில் எவ்வித கட்டிடங்களும் இருக்கவில்லை அத்துடன் இக்காணிகள் அனைத்தம் போக்கு வரத்து அமைச்சுக்கு (சி.ஜி.ஆர்) சொந்தமானது.இக்கால கட்டத்தில் அதாவது 1986ம் ஆண்டளவில் மர்ஹும்எம். எச். முஹம்மத் அவர்கள்  மாளிகாவத்தை ரஜபொகுன மாவத்தையில் அரசாங்க காணியொன்றைப்பெற்று தமது சொந்த முயற்சியில் இஸ்லாமிய மத்திய நிலையம் என்ற பெயரில் ஒரு கட்டிடத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் இதன்போது  திணைக்கள ஊழியர்கள் அமைச்சர் மாளிகாவத்தையில் இஸ்லாமிய நிலையத்திற்கு பதிலாக முஸ்லிம் திணைக்களத்திறகு ஒரு நிரந்தரமான கட்டிடத்தை திணைக்களத்திற்கு பக்கத்திலுள்ள சி.ஜி.ஆர் காணியில் அமைக்கலாமே என எல்லோரும் அமைச்சரை குறை கூறிக்கொண்டிருந்தனர். 


எனவே 1986ம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் திணைக்களத்திற்கு ஒரு தனியான இடம் தேவை என்பது பற்றி  திணைக்கள ஊழியர்கள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளின் உள்ளத்திலும் ஊசலாடிக்கொணடிருந்தது. எம்.எச். முஹம்மத் அவர்கள் சபாநாயகராக பதவி மாற்ற பட்டதின் பின்பு இத்திணைக்களம் 1990ம் ஆண்டுஇல34. மலேவீதி கொழும்பு -2 என்ற முகவரிக்கு அதாவது மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் கல்வி அமைச்சரா க  இருந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.


1994ம் ஆண்டளவில் போக்குவரத்து அமைச்சராக லலித் அதுலத்முதலியின் மனைவி ஸ்ரீமானி அத்துலத் முதலி செயல்படடுக்கொண்டிருந்தார்கள் அவரின் இணைப்புச் செயலாளராக இஸ்ஸத் என்பவர் செயல்பட்டுக்கொண்டிருந்தார். இவர் தினமும் மாலை நேரங்களில் எமது திணைக்களத்திற்கு வருபவராக இருந்தார் இக்கால கட்டத்தில் திணைக்களத்தின் பணிப்பாளராக மர்ஹும் யு.எல்.எம். ஹால்தீன் அவர்கள் செயல்பட்டக்கொண்டிருந்தார்கள்  ஒருதினம் நானும் ஹால்தீன் அவர்களும் கதைத்தக்கொணடிருக்கம்போது  இஸ்ஸத் என்பவர் மூலம் ஸ்ரீமானி அத்துலத் முதலியிடம் குறிப்பிட்ட அக்காணியினைகேட்டுப்பார்க்கலாமே என்றேன் அதனை ஹால்தீன் அவர்கள் உடனே அங்கீகரித்து  அதற்கான முயற்சியில இரங்கினார்கள் இஸ்ஸத் என்பவருக்கும் அமைச்சருக்கும் மிக நெருக்கம் காணப்பட்டதாலும் அக்கால கட்டத்தில் அசைச்சருக்கும் அரசாங்கத்திற்குமிடையில் ஓரளவு முருகல் நிலை காணப்பட்தாலும் இஸ்ஸத் என்பரினதும் முயற்சி வெற்றியளித்தது.இக்கால கட்டத்தில் மு.ச.ப.அ. திணைக்களம் கலாச்சார அமைச்சின்கீழ்செயல்பட்டது அதன் அமைச்சராக காலஞ்சென்ற லட்சுமன் ஜயக்கொடி  அவர்கள் திகழ்ந்தார்கள் இவரிடமும்  மு.ச.ப.அ. திணைககள இணைப்பு அதிகாரியாக எம்.எச்.எம் உவைன் என்வர் செயல்பட்டுக்கொண்டிருந்தார் இவரும் அமைச்சருடன்நெருக்கமான தொடர்பைக்கொண்டிருந்ததனால் அமைச்சில் இருந்து வரக்கூடிய நன்மை தீமைகளை சமாளிக்கக் கூடியவராக இருந்தார்.


இதேபோன்று ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்காவுடன் வபான் என்பவர் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார் அத்துடன்ஜனாதிபதி அவர்கள் அவரது பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட உரையின்போது முஸ்லீம்களுக்கு வகுப் ஹவுஸ் ஒன்றையும் அமைக்கும் திட்டம் ஒன்று தம்மிடம்இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே  சிரிமானி அதுலத்முதலி அவர்கள் இது விடயத்தில் அனுமதி கோரிய போது அவர் உடனே அனுமதியளித்தார் எனவே என்பது பேர்ச் சி ஜீ ஆர் காணி வகுப் ஹவுஸ் அமைப்பதற்காக வழங்கப்பட்டன இதனை பெறுவதில் முன்னின்று உழைத்தவர் பணிப்பாளர் யூ எல் எம் ஹால் டீன் ஆகும்.


இவ்விடத்தில் முக்கிய விடயம் என்னவெனில் மு.ச.ப.அ. திணைககளத்திற்கு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் பணிப்பாளரதும் மேலும் சில இணைப்பு அதிகாரிகளினதும்  முயற்சியினால் மு.ச.ப.அ. திணைககளத்திற்கு இப்பெறுமதியான காணியினைப்பெற்றதாகும். போக்குவரத்து அமைச்சர்களாக இரு முஸ்லிம்கள்இருந்தும் அவர்களால் இக்காரியம் முடியாமல் போகவே குறிப்பாக பணிப்பாளரதும் மற்றும்  அதிகாரிகளினதும் அயராத முயற்சியினாலேயே  இக்காணிகிடைக்கப்பெறமுடிந்தது. மர்ஹும் யு.எல்.எம். ஹால்தீன்  அவர்களது முயற்சிக்கு அப்பொழுத கலாச்சார செயளாளராக இரந்ந குணசேகர என்பவர்  பல இடைஞ்சல்களை மேற்கொண்டபோதும் அவைகளுக்கும் மத்தியில் தமது முயற்சியில் வெற்றிகண்டார். ஆரம்பத்தில் தற்போதைய கட்டிடத்திற்கு முன்னால் உள்ள அதாவது பாதையோரத்தில்  முன்ப காமினி படமாளிகை இருந்த இடத்திலேயேகாணி ஒதுக்கப்பட்டிருந்தது மர்ஹும் எம். எச். முஹம்மத் அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது(மஹிந்தவின் காலத்தில்) குறித்த காணி நகர அபிவிருத்திக்கு தேவைப்படுவதாகக்கூறி அதற்கு பதிலாக தற்போது கட்டிடம் உள்ள இடத்தில் காணியை ஒதுக்கினார்.இது அவர்களது சுய நலத்திற்காக இடம் பெற்றாலும் அது எமக்கு நண்மையாகவே அமைந்தது காரணம்தற்போதுள்ள இடம் ஓரளவுக்கு மற்றவர்களின் கண்களிலிருந்து  ஓதுங்கி காணப்படுவதாகும்.  முன்பு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் 1996ம் ஆண்டு சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்றக்குழுவினால் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் மர்ஹும் யு.எல்.எம். ஹால்தீன் அவர்களது முயற்சியால்நடப்பட்டது.


எனினும் அது பலன் அளிக்கவில்லை.ஈரானியத்தூதரகம் கட்டித்தருவதாக முன் வந்தது அதனை அதிகமானோர் விரும்பாததால் கைவிடப்பட்டது. 1998ம் ஆண்டு இலங்கையின் 50வது சுதந்திரதினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டபோது பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு வலவில் ஒரு கண்காட்சி நடைபெற்றது அதன்போது யான் எமது இக்கட்டிடத்தொகுதியின்  மாதிரி ஒன்றினை  பெரிய வடிவில் உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபல் யப்படத்தும் நோக்கில் காட்சிக்கு வைத்தேன்.  எனவே கட்டிடத்திற்கான காட்சியைப் பெற்றது மற்றும் அதற்கான வரையப்படும் தயாரித்தல் போன்ற அனைத்துத் மர்ஹும் காலிதீன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது


கௌரவ ரவூப் ஹகீம் அவர்கள் துறைமுகங்கள் முஸ்லிம் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின் 2004ம்ஆண்டு மு.ச.ப.அ. திணைககளத்திற்காக ஒரு தற்காலிக கட்டிடத்தை குறிப்பிட்ட இடத்திற்கு அருகில் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் அமைத்து 2004ம் ஆண்டு திணைக்களத்தை  மலே வீதியிலிருந்துகுறிப்பிட்ட இடத்திற்கு மாற்றினார் .கொழும்பு 5 கெப்படிபொல மாவத்தையில் செயல்பட்டுவந்த வகுப்பிரிவும் இக்கட்டிடத்திற்கு மாற்றபடபட்டதால் பெரிதும் இட நெருக்கடி ஏற்பட்டது.


புதிய கட்டிடத்தின் அவசியம் உணரப்படவே மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலிருந்து அலவிமௌலானா அமைச்சர் பௌஸி போன்றோர் மஹிந்த ராஜபக்ஷபெசில் ராஜபக்ஷ ஆகியோரை அனுகி புதுக்கட்டிடத்திற்கான நிதி கேட்டபோது 295 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது இக்காலத்தில் எம் ஐ அமீர் அவர்கள் பணிப்பாளராக இருந்தார் இவரினதும் முயற்சியின் காரணமாகவே.  புதுக்கட்டிடம் உருவாகியது


2006ம் ஆண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்கலாச்சார பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்களினால் நாட்டப்பட்டது இது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் ஆரம்பகாலமாகும்


இக்கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் மும்முரமாக இடம்பெற்றாலும் பிற்பட்ட காலங்களில்  ஆமை வேகத்திலேயே இடம்பெற்றன2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டிட வைலைகள் 2017ம் ஆண்டிலேயே ஓரளவுக்கு முடிவுக்குவந்தன கட்டிட நிர்மணத்திற்காக  சி ஈ பி என்ற நிறுனத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது இந்நிறுவனம் நிதிகிடைக்கும்போது வேலையை தொடங்குவதாகவும் குறிப்பிட்ட நிதி முடிவடைந்தவுடன் வேலையை நிறுத்துவதாகவும் இருந்தது . 


இக்கால கட்டத்தில் திணைக்களத்தின் பணிபபாளர்களாகத்திகழ்ந்த எம். ஐ. அமீர். வை. எல். எம். நவவி எம். ஸமீல் ஆகியோர் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அலவி மொலானா ஆகியோர்களை அணுகி அவர்கள் நிதி அமைச்சர் மற்றும் பெசில் ராஜபக்ஷமூலம்  காலத்திற்கு காலம் நிதிகளைப்பெற்றுக்கொத்துதவினர். கட்டிட நிர்மாணப்பணியின் இறுதிமாடியில் இஸ்லாமிய கட்டிடக்கலையின் வடிவமான குப்பா வடிவமைக்கப்பட்டதை கலாச்சார அமச்சின்செயலாளர் மற்றும் அரசாங் அமைச்சர்கள் கண்ணுற்றதன் பின்பு அவர்கள் உள்ளத்தில் இது  பெரிய சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.கட்டிடத்தின் வடிவமைப்பு தற்போது சுமார்  20வருடஙகளுக்கு முன் வடிவமைக்கப்பட்டது அது குறிப்பிட்ட நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது அவர்கள் அவர்களுக்கு கையளிக்கப்படடதன் அடிப்படையில் காரியங்களைச் செய்திருந்தார்கள் மருதானை சந்தியிpலீருந்து பார்க்கும்போது இக்கட்டிடம் ஒரு பள்ளியைப்போனறு; காட்சியளிப்பதானாலேயே அவர்களுக்கு இக்கட்டடத்தின்மீது பெரும் எரிச்சலையும் கோபத்தையும் ஏறபடுத்தியது  


முன்னைய அரசாங்கத்தின் கலாச்சார அமைச்சின் செயலாளர் “ இக்கட்டிடத்தின் வடிவமைப்பை நான் முன்னமே தெரிநதிருந்தால்  அதனை நான் நிறுத்தியிருப்பேன்" எனக்கூறினார்.இதனால் சில காலம் இக்கட்டிடத்தின் வேலைகள் தேம்பிக்கிடந்தன.ஆனால் பூச்சு வேலைகள் தவிர்ந்த கட்டிடப்பணிகள் பூர்த்தியடைந்த நிலையிலேயே  இருந்தன


அடுத்து வந்த அரசாங்கத்தில் கௌரவ எம்.எச்.ஏ.ஹலீம் அவர்கள் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்  திணைக்களத்தின் இடநெறுக்கடியைக்கணணுற்ற அவர் நிதி அமைச்சரான ரவி கருனாநாயக்காவைஅழைத்துவந்து கட்டிடத்தைக்காண்பித்து பல கோடிக்கணக்கான ரூபாய்க்களை ப்பெற்று கட்டிடத்தின் மூன்று மாடிகளின்பூச்சு வேலைகளை பூரணப்படுத்தி 2017ஜனவரி மாதம் 17 ம் திகதி திறப்பு விழாவினைச்செய்திருந்தார்கள். இதுவோர் வரவேற்கத்தக்விடயமாகும் இத்திணைக்களத்திற்கு முஸ்லிம் அமைச்சர்ஒருவர் நியமிகடகப்பட்டிருக்காவிட்டால் இக்கட்டிடத்தின் வேலைகள் மேலும் இழுத்தடிக்கப்பட்டிருக்கும்.  நிலம் அரசாங்கத்தினது ,கட்டிடத்தின் முழச்செலவும் அரசாங்கத்தினது எனவே எதிர் காலத்தில் அரசாங்கம் அதன் அமைச்சுக்களை இங்கே புகுத்த வாய்ப்புக்கள்உள்ளன அத்துடன் இக்கடடிடத்தினை பராமரிப்பதிதிலும்; திணைக்களத்திற்கு நிதிப்பிரச்சினைகள்இருக்கின்றன


தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் ஒருவர் பிரதி அமைச்சராக இருக்கின்றார் எனவே இக் கட்டிடத்தை தக்கவைத்துக்கொள்ள தில் பாரிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. சில மாடிகள் ஹிந்து கிறிஸ்தவ திணைக்களங்களுக்கு போய்விட்டாலும் மேலும் இருக்கும் மாடிகளையாவது தக்கவைத்து முஸ்லிம் திணைக்கள கட்டிடத்தொகுதியாகவே செயல்படவழி செய்யுமாறு வேண்டுகிறோம்


மௌலவி. ஜே. மீரா மொஹிதீன்

முன்னாள் பிரதிப்பணிப்பாளர்- மு.ச.ப.அ.திணைக்களம்

No comments

Powered by Blogger.