Header Ads



கொடகமவில் விசித்திரமான விபத்து


அம்பலாங்கொடை, கொடகம பகுதியில் வியாழக்கிழமை (01) காலை ஒரு கார் தென்னை மரத்தில் மோதியதில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.


கார் வீதியை  விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி பின்னர் மரத்தின் அடிப்பகுதியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


அம்பலாங்கொடையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற காரே விபத்தில் சிக்கியது,  விபத்து நடந்தபோது வீதியின் குறுக்கே திடீரென பாய்ந்த  ஒரு பயணியை காரின் ஓட்டுநர் காப்பாற்ற முயன்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.