ஒரு பெற்றோரின் 4 ஆண் குழந்தைகள் வபாத் ஆன சோகம்
கோழிக்கோடு சேர்ந்த அப்துல் லத்தீப் துபாயில் பணியாற்றி வருபவர். மனைவி ருக்சானா ஐந்து குழந்தைகள் உடன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை கழிக்க குடும்பத்தினரோடு அபுதாபி சென்று திரும்புகையில் அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.
அப்துல் லத்தீப் போற்றி வளர்த்த ஆண் பிள்ளைகள் 4 பேரும் அஷாஸ் (14), அம்மார் (12), அஸாம் (7), அயாஷ் (5) ஆகியோரும், இவர்களுடன் காரில் பயணித்த வீட்டு பணியாளர் 49 வயதான புஷ்ரா என்ற கேரள பெண்மணியும் வஃபாத் ஆனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையும், தாயும், ஒரு பெண் குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (06) மாலை 4 ஆண் குழந்தை ஜனாஸாக்களும் துபாய் அல் குவாசிஸ் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எல்லாம் வல்ல அல்லாஹ் குழந்தைகளுக்கு மஃபிறத் அருள்வானாக. பெற்றோருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக.
Colachel Azheem

Post a Comment