Header Ads



19 வயதுகுற்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கையணியில் தமிழ், முஸ்லிம்களும் உள்ளீர்ப்பு


19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ இலங்கை இளையோர் குழாமை  கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது. 


 வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மதுலன் உள்வாங்கப்பட்டு, இவருடன் விக்னேஸ்வரன் ஆகாஷ் (சென்.ஜோசப் கல்லூரி,மருதானை) மற்றும் ஜீவந்த ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி,கொழும்பு) ஆகியோரும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 


இவர்களை தவிர, திமந்த மஹவிதான, விரான் சமுதித்த, துல்நித் சிகேரா, சாமிக ஹீந்திகல, ஆதம் ஹில்மி, சமரிந்து நெத்சர, செத்மிக செனவிரத்ன, ராசித் நிம்சர, செனுஜ வேகூனகொட, மலிந்த சில்வா ஆகியோரும் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.


உலகக் கிண்ணத் தொடருக்கான ஆயத்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவும், அந்நாட்டுக் காலநிலைக்கு ஏற்றவாறு தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்காகவும் இலங்கை அணி இன்று (1) நமீபியா  புறப்பட்டது.

No comments

Powered by Blogger.