Header Ads



Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டன!


வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 


பிரதான வீதிகளில் 12,000 கிலோமீற்றர் தூரம் வரை கூகுள் வரைபடங்களில் நிகழ்நேரத் தகவல்களை (Real-time information) புதுப்பிக்கப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பின் மூலம் பயணிகள் தங்கள் பயணங்களை மிகவும் வினைத்திறனாகத் திட்டமிடுவதற்கு உதவும் வகையில், வீதித் தடங்கள் மூடப்படுதல் மற்றும் கட்டுமான அறிவிப்புகள் உள்ளிட்ட ஆறு வகையான நிலை எச்சரிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


இந்தப் புதிய விசேட அம்சமானது பயண தாமதங்களைக் குறைக்கவும், வழித் திட்டமிடலை மேம்படுத்தவும் மற்றும் வீதியைப் பயன்படுத்துவோருக்கான எதிர்பாராத நெரிசலைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.  அண்மைய புதுப்பித்தலை தங்கள் கூகுள் வரைபடச் செயலியைப் (App) பரிசோதித்து, பயணிக்கும் போது மேம்படுத்தப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


இத்திட்டம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஒரு முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்படும்

No comments

Powered by Blogger.