பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை
யாசகம் செய்பவர்கள் வெளிநாடு செல்வதற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உம்ரா விசாவை தவறாகப் பயன்படுத்துவது பரவலாக உள்ளது.
சவுதி அரேபியாவில் இந்த விசாவை யாசகம் கேட்கத் தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு வழக்குகள் பதிவாகின. தையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், குடியேற்ற நடைமுறைகளை சீரமைக்க ஒரு குழுவை அமைத்தார்.
இந்நிலையில், யாசகர்களும், முழுமையற்ற ஆவணங்களுடன் பயணம் செய்பவர்களும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நக்வி, நாட்டின் கண்ணியத்தை காப்பது தனது முன்னுரிமை என்று அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.
Post a Comment