தாய்நாட்டை உலகில் மதிப்புமிக்கதாக மாற்ற, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - ஜனாதிபதி
இயற்கை பேரிடரை எதிர்கொண்டபோது, மக்களை மீட்பதிலும், வசதிகளை வழங்குவதிலும் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய இலங்கை இராணுவத்தினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டை உலகில் மதிப்புமிக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதுடன், இதற்கான பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.
இன்று (21) தியதலாவிலுள்ள இலங்கை இராணுவ கல்லூரியில் நடைபெற்ற அதிகாரிகள் பதவியேற்பு, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment