Header Ads



ஜனாதிபதியிடம் ஹக்கீம் முன்வைத்துள்ள அருமையான யோசனை


2025 டிசம்பர் மாதத்திற்குரிய மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறு  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ,  ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கடிதம்மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் முழு நாட்டையும் கடுமையாக பாதித்த மிகப் பெரும் பேரழிவாக இது அமைந்துள்ளதாகவும்,  வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதமடைந்த உடைமைகளைச் சுத்தம் செய்து சீரமைக்க அதிக அளவில் தண்ணீரும், மின்சாரமும் பயன்படுத்தப்பட. வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 பொருளாதாரத்திலும் ,உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கை முன்கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில், 2025 டிசம்பர் மாதத்திற்குரிய நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் 50 சதவீத தள்ளுபடியை வழங்குமாறும் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.