பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன்"
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் அறிக்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார். நல்லாட்சியில் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்ட வகையில், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது சட்டமானால் அரசமைப்பால் உரித்தாக்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். எனவே, மேற்படி சட்டவரைவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன்." - என்றார்.

Post a Comment