சுமண ரத்ன தேரரை தொடர்ந்து காணவில்லை
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்து வெளிநாட்டு செல்வதற்கு பயணத்தடை விதித்துள்ளது.
குறித்த உத்தரவானது நேற்று (15.12.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வரை நீதவான் வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
நீதிமன்றில் சமூகமளிக்காத நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியது.

Post a Comment