அவமானத்தின் சுமையினால் பணியில் சேர விரும்பாத முஸ்லிம் வைத்தியர்
முதலமைச்சர் நிதிஷ்குமார் பணி நியமன ஆணை பெறவந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாபை நிதிஷ்குமார் கழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெண் மருத்துவர் நுஸ்ரத் தனது பணியை ராஜினாமா செய்தார். இந்த மாதம் 20 ஆம் தேதி அவருக்கு பணியில் சேர நியமனக் கடிதம் கிடைத்ததாகவும், ஆனால் அவர் பணியில் சேரவில்லை என்றும் அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவமானத்தின் சுமை காரணமாக தான் அவர் பணியில் சேர விரும்பவில்லை என்று நுஸ்ரத் கூறியதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Post a Comment