Header Ads



கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம்


கொழும்பு மாவட்டத்தில் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 


கொழும்பு மாவட்டத்துக்குள் சரியான திட்டமிடல் இல்லாமல், பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழ் எடுக்கப்பட்ட தீர்மானங்களினாலேயே கொழும்பு மாவட்ட மக்கள் இந்த முறையில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். 


எனினும், இனி இந்த விதமான அத்துமீறிய கட்டுமானங்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் மக்கள் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.