Header Ads



மண்சரிவில் காணாமல் போன ஒரே மகள், 11 நாட்களாக தேடும் தாய்


பதுளை,  நாகொல்ல கிராமத்தில்  27ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண் சரிவில் காணாமல் போன தனது ஒரே மகளை தாய் தேடி வருகிறார். 21 வயதான காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ என்றயுவதி மண் சரிவில் சிக்கி 11 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


அந்த கிராமத்தில் மண் சரிவில் சிக்கி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன யுவதியின் உறவினர்கள் மூவரும் இதில் அடங்குவர். மண் சரிவு ஏற்படும் தப்பியோடும் போது மகள் அதில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.


தனது மகள் இந்த மண்மேட்டிற்குள் இரண்டடி அல்லது மூன்றடி ஆழத்தில் எங்கோ இருக்கிறார் என உறுதியாக நம்புவதாகவும், தினமும் 20, 30 தடவைகள் வந்து மகளை தேடுவதாகவும் தாயார் குறிப்பிட்டுள்ளார்.


மகளின் கையைப் பிடித்துக்கொண்டு ஓட முயற்சித்த போது மகள் தோட்டப் பக்கம் பாய்ந்ததாகவும், மகள் கை நழுவியதாகவும், இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தாய் தெரிவித்தார்.


அவரது மகன் அருகில் உள்ள வயலில் இருந்து ஓடிவந்து தன் தாயைக் காப்பாற்றினார். எனினும் மகளைக் காப்பாற்ற முடியவில்லை. மகள் மிகத் திறமையானவர் எனவும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்லவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.