சூறாவளி எச்சரிக்கை அலட்சியம்: அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு
இது தொடர்பாக, 'சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின்' அழைப்பாளர் சட்டத்தரணி தினேஷ் விதான பத்திரண கூறுகையில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி முதல் சூறாவளி தாக்கும் வரையில் முறையான எச்சரிக்கை வழங்கத் தவறியதன் மூலம் 'நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காக' அரசாங்கத்தை பொறுப்பாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றத் தவறியமைக்காக அரசாங்கத்திற்கு எதிராக எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ரவீந்திர தாபரே தெரிவித்தார்.
இத்துடன், டிட்வா சூறாவளி தொடர்பான அபாய எச்சரிக்கைகளை முறையாக வெளியிடாத வளிமண்டலவியல் திணைக்களத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக'அபி ஸ்ரீ லங்கா தேசிய அமைப்பின்' அழைப்பாளர் பிரியந்த ஹேரத் கூறினார்.

Post a Comment