அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல், கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம் - ஜனாதிபதி
🔴 பயிரிட விவசாயிகளை தயார்படுத்துங்கள்
🔴 இழப்பீடு பெறத் தகுதியானவர்களின் பட்டியலையும் தேவையான தொகையையும் வெள்ளிக்கிழமைக்கு முன் அறிவிக்கவும்
🔴 பயிற்செய்கை நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குவதே இழப்பீடு வழங்குவதன் முக்கிய நோக்கம்
🔴 நீர்ப்பாசன கட்டமைப்பு நிரந்தரமாக மீளமைக்கப்படும் வரை தற்காலிகமாக நீர் விநியோகத்தை வழங்குக
🔴 மாணவர்களுக்கு திறைசேரியால் வழங்கப்பட உள்ள 15,000 ரூபாவை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்கவும்.
🔴 மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அரசு அதிகாரிகள், பொலிஸார் மற்றும் முப்படையினரின் பங்களிப்பிற்கு குரித்து நன்றி.
🔴 அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக இன்று (07) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

Post a Comment