ரத்தினக் கற்களைக் கடத்தியவர்கள் பிடிபட்டனர்
தமது ஆசனவாய் மற்றும் பொதிகளில் மறைத்து வைத்து சீனாவிற்கு ரூ.32 மில்லியன் மதிப்புள்ள ரத்தினக் கற்களை கடத்த முயன்ற 2 இலங்கை விமானப் பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் 38 மற்றும் 39 வயதுடைய ரத்தினக் கற்கள் வணிகர்கள், பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவர் மீதும் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், அவர்களைச் சோதனையிட்டபோது ரத்தினக் கற்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இந்த ரத்தினங்களில், ப்ளூ சஃபையர், பத்மராச்சா, ஸ்பைனல், ரூபி, க்ரைசோபரி, சாவோரைட், கார்னெட், கேட்ஸ் ஐ, மூன்ஸ்டோன், டூர்மலைன் மற்றும் ஸ்டார் ஷேப்பர் ஆகிய முக்கிய ரத்தினக் கற்களின் 756 கரட் எடையுள்ள 390 ரத்தினக் கற்கள் இருந்தன.

Post a Comment