காசாவில் குளிரில் மரணத்தை தழுவும் குழந்தைகள்
காசா - கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள மவாசியில் கடுமையான குளிராலும், இடம்பெயர்ந்தவர்களின் கூடாரங்கள் வெள்ள நீரில் மூழ்கியதாலும், குழந்தை ரஹாஃப் அகமது நஜி அபு ஜசார் (9 மாதங்கள்) இன்று (11) மரணமடைந்துள்ளது. குழந்தையின் தாயும், தந்தையும் இறந்த தமது மகளின் உடலை கையில் ஏந்திருப்பதை படங்களில் காண்கிறீர்கள். காசாவில் அறைகுறை போர்நிறுத்தம் நீடிக்கிறது. எனினும் இயல்பு நிலை திரும்பவில்லை. குளிரைத் தாங்கும் போர்வைகளோ, வெப்பமூட்டிகளோ இல்லாமையால் அங்குள் மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொள்கின்றனர். எமது பிரார்த்தனைகளில் அவர்களை இணைத்துக் கொள்வோம்...

Post a Comment