Header Ads



ரணிலின் உடல்நிலை குறித்து, ஊடகங்களுக்கு கூறிய வைத்தியர் பணிநீக்கம்


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கடிதத் தலைப்பின் கீழ் இது தொடர்பான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.


சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கும் அரச வைத்திய அதிகாரி என்ற ரீதியில், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலும் அனுமதியின்றி ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டதற்காக பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பதில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.