ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதியாக நஸ்ரி அஸ்ஃபுரா தெரிவு
பாலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட, தொழிலதிபர் நஸ்ரி அஸ்ஃபுரா இன்று (25) புதன்கிழமை ஹோண்டுராஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவைப் பெற்ற 67 வயதான அஸ்ஃபுரா, சக பழமைவாத தொலைக்காட்சி ஆளுமை சால்வடார் நஸ்ரல்லாவை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இவரது வெற்றியை அமெரிக்கா பாராட்டியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை இவர் முடிவுக்கு கொண்டு வருவாரென, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment