Header Ads



இலங்கைக்குக் 206 மில்லியன் டொலர்களை உடனடியாகப் பெற வாய்ப்பு - IMF ஒப்புதல்


சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 


இதன் மூலம் சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளது. 


பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயலினால் ஏற்பட்டுள்ள அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், நாட்டின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்த நிதியுதவி இலங்கைக்குப் பக்கபலமாக அமையும்.

No comments

Powered by Blogger.