Header Ads



பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த 10 நிவாரணங்களின் விபரம்


🔺 தளபாடங்கள் சேதமடைந்த வீடுகளுக்கு, அடிப்படை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 ரூபாய் வழங்கப்படும்.


🔺 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தவர்கள், பகுதியளவில் சேதமடைந்தவர்கள் அல்லது வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும் NBRO பரிந்துரையின் பேரில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டவர்களுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கல். 


🔺 நெல், சோளம், நிலக்கடலை மற்றும் ஏனைய தானியங்களைப் பயிரிட்டுள்ளவர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 150,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கல்.


🔺 மிளகாய், வெங்காயம், பப்பாளி, வாழை உள்ளிட்ட செய்கைகளை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 200,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும். 


🔺 அடர்த்திக்கு ஏற்ப மிளகு, ஏலக்காய் மற்றும் கோப்பி ஆகிய பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் ( ஒரு மிளகு கொடிக்கு 250 ரூபாய்). 


🔺 கால்நடை மருத்துவ அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட ஒரு கலப்பினப் பசுவிற்காக தலா 200,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 10 பசுக்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 


🔺 ஒரு நாட்டு பசுவிற்காக 50,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 பசுக்களுக்குக் கொடுப்பனவு வழங்கப்படும். 


🔺 பன்றி, ஆடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு விலங்கிற்கு 20,000 ரூபாய் வீதம் அதிகபட்சம் 20 விலங்குகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 


🔺 உயிரிழந்த ஒரு முட்டையிடும் கோழிக்கு 500 ரூபாய் வீதம் அதிகபட்சம் 2,000 கோழிகளுக்கு உதவி வழங்கப்படும். 


🔺 இறைச்சிக் கோழி ஒன்றிற்கு 250 ரூபாய் வீதம் அதிகபட்சம் 4,000 கோழிகளுக்கு உட்பட்டு (அதிகபட்சம் 10 இலட்சம் ரூபாய் வரை) நட்டஈடு வழங்கப்படும்.


 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் இந்த நிவாரணங்களை அறிவித்தார்

No comments

Powered by Blogger.