உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான Repeaters Project 2026 – City College Mawanella
அதன் பின்னணியில் கல்வி பாரம்பரியத்தை 15 ஆண்டுகளாக வலுப்படுத்தி வருவதில் City College of Mawanella நிறுவனத்துக்கு பாரிய பங்குண்டு. இதுவரை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் City College ஊடாக கல்வி கற்றும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மாவனல்லை பகுதி மாணவர்கள் மாத்திரமல்லாமல் , இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து மாணவர்கள் கல்வி கற்று பயனடைந்துள்ளனர்.
தரம் 5 முதல் உயர்தரம் வரை, அனைத்து பாடங்களும் திறமையான மற்றும் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் குழாமின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் பல சாதனைகளையும் City College Mawanella நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2025 உயர்தர பரீட்சையை முடித்து மீண்டும் தேர்வுக்கு தோற்ற விரும்பும் மாணவர்களுக்காக City College, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Repeaters Project 2026 ஐ அறிமுகப்படுத்துகிறது.
இஸ்லாமிய சுழலில் சிறந்த தங்குமிட வசதிகளுடன் மாணவர்கள் 2026 உயர்தரத்தில் சிறப்பான பரீட்சை முடிவுகளைப் பெறும் வகையில் குறித்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,City College இன் Repeaters Project , இலங்கையின் சிறந்த கணித, விஞ்ஞான ஆசிரியர் குழாமால் முன்னெடுக்கப்படுகிறது.
குறிப்பாக 2023 ஆம் ஆண்டு கேகாலை மாவட்ட விஞ்ஞான பிரிவில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுத் தந்த ஆசிரியர்கள் இத்திட்டத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய சிறப்பம்சமாகும். அத்துடன் குறித்த ஆசிரியர் குழாம் ஒவ்வொரு வருடமும் அதிகூடிய பல்கலைக்கழக அனுமதிகளை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் குறித்த Repeaters Project ஊடாக பல்கலைக்கழக மாணவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் ஒவ்வொரு மாணவர்களும் தனியாக கண்காணிக்கப்படுவார்கள்.
அந்தவகையில் குறித்த பாடநெறி எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. கட்டண பதிவுகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும் உணவுடன் கூடிய விடுதிக்கான கட்டணம் 18 ஆயிரம் ரூபாவும் மாதமொன்றுக்கான கற்கைகளுக்கான கட்டணம் 7500 ரூபாவும் அறவிடப்படும். இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு 077 313 1277, 0766770042 அழைக்கலாம். அதேவேளை QR Code மூலமாகவும் நீங்கள் உடனடியாக பதிவு செய்யலாம்.



Post a Comment