காதலனின் வீட்டில் நகை திருடிய காதலி
காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார்.
காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
டிக்டொக் வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இதுவரையில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் ககாதலி கூறியுள்ளார்.

Post a Comment