எல்லாத் திருடர்களும் NPP க்கு எதிராக அணிதிரண்டுள்ளனர்
நாமல் ராஜபக்ச எம்.பியைத் திருடர்களின் இளவரசர். இந்த நாடு வங்குரோத்து நிலை அடைந்ததற்கு மகிந்த ராஜபக்சவின் குடும்பமே பதில் சொல்ல வேண்டும். நுகேகொடையில் மேடையில் இருந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே சிறை சென்றவர்கள். இன்று எல்லாத் திருடர்களும் ஒரே மேடையில் NPP க்கு எதிராக அணிதிரண்டுள்ளனர்
ஹரின் பெர்னாண்டோ ஒரு காலத்தில் மகிந்தவை 'பகல் திருடன்' என்று வர்ணித்த அதே வாயால், இன்று நாமல் ராஜபக்சவை 'இளவரசர்' என்று சொல்கிறார். "மொட்டுக் கட்சி என்பது "இனவாதத்தின் சின்னம்". இந்தத் திருட்டுக் கும்பல் மீண்டும் இனவாதத்தை உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றப் பகல் கனவு காண்கின்றது.
ஆனால், இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் புத்திஜீவிகளாகச் சிந்திக்கின்ற காரணத்தால், அந்தக் கட்சியால் இந்த முயற்சியில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

Post a Comment