தகா வார்த்தைகளை பயன்படுத்திய Mp க்கள் தொடர்பில் விசாரணை
நாடாளுமன்ற அமர்வுகளின் போது சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகத்தால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (11) அறிவித்தார்.
முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்று நிலையியற் கட்டளை 82.1 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் இவ்வாறு பதிலளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட அத்தகைய வார்த்தைகள் ஹன்சார்ட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும், நேற்றைய அமர்வுகளின் போது முறையற்ற மொழி பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகத்திற்கு தான் உத்தரவிட்டதாகவும் சபாநாயகர் கூறினார்.

Post a Comment